ரஜினி மகிழ்ச்சி; விருது, மகள் உருவாக்கிய செயலி

ரஜினி மகிழ்ச்சி; விருது, மகள் உருவாக்கிய செயலி

1 mins read
48501ee9-889e-4081-95f8-f8578f6a83c6
-

சென்னை: தமது இரண்­டா­வது மகள் சௌந்­தர்யா விசா­கன் மக்­க­ளுக்கு மிக­வும் பயன்­ப­டக்­கூ­டிய வகை­யில் 'ஹூட்' (HOOTE) எனு­ம் செய­லியை உரு­வாக்கி உள்­ள­தாக நடி­கர் ரஜி­னி­காந்த் தெரி­வித்­துள்­ளார்.

அதை தாம் அறி­மு­கப்­ப­டுத்த இருப்­ப­தா­க­வும் அறிக்கை வழி அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாம் மற்­ற­வர்­க­ளுக்கு எழுத்து மூலம் தெரி­விக்க விரும்­பும் கருத்துகளையும் விஷ­யங்­களை­யும் இனி நம் குர­லி­லேயே எந்த மொழி­யி­லும் 'ஹூட் ஆப்' (HOOTE APP) மூல­மாக பதி­வி­ட­லாம்.

"இந்த வர­வேற்­கத்­தக்க புதிய முயற்­சியை என் குர­லில் பதி­விட்டு துவங்க உள்­ளேன்," என்று ரஜி­னி­காந்த் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே டெல்­லி­யில் இன்று நடை­பெ­றும் விழா­வில் அவ­ருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்­கப்­பட உள்­ளது.

இதை­ய­டுத்து நேற்று காலை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், விருது கிடைக்­கும் என தாம் அறவே எதிர்­பார்க்­க­வில்லை என்­றார்.

தாம் விருது பெறு­வ­தைப் பார்க்க இயக்­கு­நர் கே.பால­சந்­தர் இல்லை என்­பது வருத்­தம் அளிப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"தாதா­சா­கேப் பால்கே விருது கிடைத்­தது மகிழ்ச்சி அளிக்­கிறது. என் வளர்ச்­சிக்கு கார­ண­மாக இருந்த இயக்­கு­நர் கே.பால­சந்­தர் இப்­போது நம்­மி­டையே இல்லை.

"நான் விருது பெறு­வ­தைப் பார்க்க அவர் இல்லை என்­பது வருத்­தம் அளிக்­கிறது," என்­றார் ரஜினி.

விருது பெற்ற பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­திப்­ப­தா­க­வும் அப்­போது விரி­வா­கப் பேசு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.