கோவையில் டெங்கிக் காய்ச்சல் அதிகரிப்பு

2 mins read
0a94122c-322f-400d-8ae0-cfcd6589f27d
-

கோவை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை கட்­டுக்­குள் வந்து கொண்­டுள்ள நிலை­யில், டெங்­கிக் காய்ச்­சல் பாதிப்பு மக்­க­ளி­டம் அதி­க­ரித்து வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதி­லும், குறிப்­பாக மாநி­லத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் கோவை மாவட்­டத்­தி­லும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் இந்­தப் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் ஒரே மாதத்­தில் 23 பேர் இந்­தக் காய்ச்­ச­லுக்கு சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் சுகா­தா­ரத் துறை கூறி­யுள்­ளது.

ஏடிஸ் வகை கொசுக்­க­ளால் டெங்­கிக் ­காய்ச்­சல் ஏற்­ப­டு­வதால், இக்­கொ­சுக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த உள்­ளாட்­சித் துறை, பள்­ளிக்­கல்வித் துறை­யு­டன் சுகா­தா­ரத்­துறை­ இணைந்து பணி­யாற்றி வரு­கிறது.

இது­கு­றித்து கோவை மாந­க­ராட்சி சுகா­தா­ர அதி­காரி டாக்­டர் சதீஷ்­கு­மார் கூறு­கை­யில், "கோவை நக­ரில் ஒரே மாதத்­தில் டெங்­கிக் காய்ச்­ச­லால் 23 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தை அடுத்து, இக்காய்ச்சலைத் தடுக்கும் பணிகளை கோவை மாந­க­ராட்சி தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது," என்­றார்.

கோவை நகர, புற­ந­கர்ப் பகு­தி­களில் டெங்கிக் காய்ச்­சல் பாதிப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ளதால் இத னைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்று கோவை மாவட்ட சுகா­தா­ரத் ­துறை துணை இயக்­கு­நர் அருணா கூறினார்.

"ஏடிஸ் கொசு உற்­பத்­தி­யா­கும் பகு­தி­களைக் கண்­ட­றி­யும் பணி­யில் சுகா­தா­ரத்­துறை சார்­பில் 12 வட்­டா­ரங்­களில் சிறப்­புக் குழு­வி­னர் ஈடு­ப­டுத்­தப்பட்­டுள்­ள­னர். இவர்­கள் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் ஆய்­வுகளில் ஈடுபட்டு வரு­கின்­ற­னர்.

"இந்த சமயத்தில் கொசு உற்­பத்­திக்கு கார­ண­மா­ன­வர்­கள் கண்­ட­றி­யப்­பட்­டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வீடு­க­ளுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக ரூ.25,000 வரை­யும் அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

"பொது­மக்­கள் தங்கள் வீடு­கள், சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­களைக் கொசு உற்­பத்­தி­யா­காமல் சுத்தமாக, குப்பை கள் சேராமல் வைத்­துக்­கொள்ள வேண்­டும்," என்று அருணா கேட்­டுக்கொண்டுள்­ளார்.