‘சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்று சொன்னவரே ஓபிஎஸ்தான்’

மதுரை: யார் வேண்­டு­மா­னா­லும் அர­சி­ய­லுக்கு வர­லாம். மக்­கள் அவர்­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். இது­தான் முக்­கி­யம். சசி­க­லாவை கட்­சி­யில் சேர்ப்­பது குறித்து தலை­மைக் கழக நிர்­வா­கி­கள் ஆலோ­சித்து முடி­வெ­டுப்­பார்­கள் என்று அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் கூறி­யுள்­ளது அதி­முக தலை­மை­யில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­ உள்­ளது.

அதே­ச­ம­யத்­தில், "இரட்­டைத் தலை­மை­யின் கீழ் கழ­கம் சிறப்­பா­கச் செயல்­பட்­டுக்கொண்­டி­ருக்­கிறது," என்­றும் மது­ரை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ஓபி­எஸ் கூறி­னார்.

இந்­நி­லை­யில், சசி­க­லாவை அதி­மு­க­வில் சேர்த்­துக்­கொள்­ளக்­கூ­டாது என்று கூறி­ய­வரே ஓபி­எஸ்­தான் என முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்து உள்­ளார்.

இது­கு­றித்து ஜெயக்­கு­மார் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "அதி­மு­க­வில் சசி­க­லாவை சேர்க்­கக்­கூ­டாது என்று கூறி­ய­வரே ஓபி­எஸ்­தான்.

"சசி­க­லா­வு­டன் அதி­மு­க­வி­னர் எந்த தொடர்­பும் வைக்­கக்­கூ­டாது என்­றும் கூறி­னார்.

"சசி­க­லாவை எதிர்த்­து­தான் ஓபி­எஸ் தர்­ம­யுத்­தம் நடத்­தி­னார். அவரை கட்­சி­யில் சேர்க்­கக் கூடாது என்று ஏற்­கெ­னவே தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சசி­க­லாவை நீக்­கி­யது பொதுக்­கு­ழுவைக் கூட்டி எடுக்­கப்­பட்ட முடிவு," என்­றும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!