அன்பில் மகேஷ்: மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல

திருச்சி: ஏற்­கெனவே அறி­வித்­த­படி நவம்­பர் 1ஆம் தேதி­மு­தல் ஒன்­றாம் வகுப்பு முதல் எட்­டாம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­க­ளுக்கு சுழற்­சி­மு­றை­யில் கண்­டிப்­பாக பள்­ளி­கள் திறக்­கப்­படும். அதில் எந்த மாற்­ற­மும் இல்லை என்று பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்­துள்­ளார்.

"பள்­ளி­கள் திறப்­புக்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனி­னும், மாண­வர்­கள் பள்­ளிக்கு வர­வேண்­டி­யது கட்­டா­யம் அல்ல. தீபா­வளி முடிந்­த­பி­றகு கூட வர­லாம்,'' என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

திருச்­சி­யில் செய்­தி­யா­ளர்­களி டம் அவர் பேசி­ய­போது, "நவம்­பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்­டாம் வகுப்பு வரை பள்­ளி­கள் திறந்­தா­லும் மாண­வர்­கள் கண்­டிப்­பாக பள்­ளிக்கு வர­வேண்­டிய கட்­டா­யம் இல்லை. முடிந்­த­வர்­கள் வர­லாம். தீபா­வளி முடிந்­த­பின்­னர் கூட மாண­வர்­கள் பள்­ளிக்கு வர­லாம். வரா­வி­டி­லும் பர­வா­யில்லை.

"இல்­லம் தேடி கல்வி' திட்­டத்­திற்கு இது­வரை 50,000 மாண­வர்­கள் பதிவு செய்­துள்ள நிலை­யில், 1.5 லட்­சம் பேர் பதிவு செய்­வர் என்று எதிர்­பார்க்கிறோம்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!