சென்னை: தலைநகர் சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர் களின் நடவடிக்கைகளை அணுக்கமாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
"குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு எங்கள் பிடியில் இருந்து அவர்கள் எங்கும் தப்பித்து ஓடவோ ஒளியவோ முடியாது," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தீபாவளித் திருநாள் அடுத்த மாதம் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் தங்க ளுக்குத் தேவையான புத்தாடைகள், மளிகைச் சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர்.
இந்தப் பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக்கொண்டு சங்கிலிப் பறிப்பு, பணப்பையைப் பறித்துச் செல்வது, கைபேசியைத் திருடுவது உள்ளிட்ட குற்றச்செயல் களில் ஈடுபடுவதற்காகக் காத்தி ருக்கும் 7,800 குற்றவாளிகள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது கைவரிசை யைக் காட்டுவதற்கு முன்பே, அவர்களை மடக்கிப் பிடிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதற்குப் போலிசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய 6,000 போலிசார் இந்த பண்டிகை கால பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து, காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து முக்கிய கடை வீதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
"பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயா் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. 'பைனாகுலா்', 'ட்ரோன்' கேமராக்கள் மூலமாகவும் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்கப்படுகிறது.
"பேஸ் டிடெக்ஷன்' மென்பொருள் மூலம் அதிநவீன தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் நடவடிக்கைகளையும் கண்கா ணித்து வருகிறோம். குற்றவாளிகள் இதற்கு மேலும் அத்துமீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
"அத்துடன், ஆங்காங்கே ஏராளமான போலிசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் குற்றவாளிகள் உடனுக்குடன் பிடிபடுவார்கள்," என்று கூறினார்.

