முன்னாள் அமைச்சர் மீது 341 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் மீது 341 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

1 mins read
3b033822-ee15-459d-90a7-10f0d41c601a
-

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் (படம்) மீதான பாலி­யல் வன்­கொ­டுமை வழக்கு தொடர்­பில் 341 பக்­கங்­கள் கொண்ட குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

சைதாப்­பேட்டை 11வது நீதி­மன்­றத்­தில் மணி­கண்­ட­னுக்கு எதி­ராக இந்த குற்­றப்­பத்­தி­ரி­கையை அடை­யாறு அனைத்து மக­ளிர் காவல்­து­றை­யி­னர் தாக்­கல் செய்­த­னர்.

நடிகை சாந்­தினி அளித்த பாலி­யல் புகார் தொடர்­பில் மணி­கண்­டன் கடந்த ஜூன் மாதம் கைது செய்­யப்­பட்டு தற்­போது நிபந்­தனை பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், மணி­கண்­ட­னுக்கு எதி­ராக 341 பக்­கங்­கள் கொண்ட குற்­றப்­பத்­தி­ரி­கை­யைத் தாக்­கல் செய்­துள்ள போலி­சார், ஏற்ெக­னவே பதி­வான ஆறு பிரி­வு­க­ளு­டன் 'சட்ட­வி­ரோ­த­மாக சிறை­பி­டித்­தல்', 'தாக்கி காயம் விளை­வித்­தல்' ஆகிய இரு பிரி­வு­க­ளை­யும் சேர்த்து வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

மணி­கண்­டன் மீது சென்னை பெசன்ட் நக­ரில் வசிக்­கும் சாந்­தினி காவல்­து­றை­யில் அளித்­தி­ருந்த புகார் மனு­வில், "மணி­கண்­ட­னும் நானும் ஐந்து ஆண்­டு­க­ளாக ஒரே வீட்­டில் கண­வன் மனைவி போல் வாழ்ந்­தோம். என்­னைத் திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தாக ஏமாற்றி, மூன்று முறை தாம் கருக்­க­லைப்பு செய்­த­தா­க­வும் தனது உயி­ருக்கு மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என­வும் குறிப்­பிட்­டு இருந்­தார்.