விஜயகாந்த்: கட்சிவிட்டு கட்சி தாவுவது நம்பிக்கை துரோகம்

சென்னை: தேமு­திக தொண்­டர்­கள் கட்சிவிட்டு கட்சி தாவு­வது எனக்கு மட்­டு­மின்றி ஒட்­டு­மொத்த கட்­சிக்­கும் செய்­யும் துரோ­க­மா­கக் கருது­கி­றேன் என தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் கூறினார்.

"கடந்த பல ஆண்­டு­க­ளாக பெரும் சிர­மப்­பட்டு வளர்த்துள்ள இந்தக் கட்­சியை விட்­டுச்­செல்­ப­வர்­கள் 'இக்­க­ரைக்கு அக்­கரை பச்சை' என்­பதை வெகு விரை விலேயே உணர்ந்துகொள்வார்கள்," என்றார் அவர்.

தேமு­தி­க­வின் நிர்­வா­கி­கள் பலரும் மற்ற கட்­சி­களில் இணை­யும் போக்கு அதி­க­ரித்­து­வருவதை கண்டித்துள்ள விஜயகாந்த், "மூளைச்­ச­லவை செய்­வோ­ரின் பேச்­சை­யும் ஆசை வார்த்­தை­க­ளை­யும் நம்பி தேமு­தி­கவை பாதி யிலேயே கைவிட்­டுச்­செல்­வது கட்­சிக்குச் செய்­யும் நம்பிக்கைத் துரோ­கம்," எனவும் வருத்தம் தெரி வித்துள்ளார்.

இது­கு­றித்து விஜ­ய­காந்த் நேற்று வெளி­யிட்­டி­ருந்த அறிக்­கை­யில், "எனது உடல்­நி­லை பாதிக்கப்பட்டு, கட்சிப் பணிகளில் சற்று தொய்வு ஏற்­பட்­டி­ருப்­பது உண்மைதான். அதற்­காக தேமு­தி­க­வுக்கு எதிர்­கா­லமே இல்லை என நினைப்பது தவ­றானது.

"இன்னும் 100 ஆண்­டு­கள் ஆனா­லும் தேமு­தி­கவை யாரா­லும் அழிக்கமுடி­யாது. இக்கழ­கம் அசைக்கமுடியாத மாபெரும் விருட்சமாய் வேரூன்றி நிற்­கும். தேமுதிக வளர்ச்­சிப்­பாதையை நோக்கிச் செல்­வ­தற்கு தொண்­டர்­கள் அனை­வ­ரும் உறு­து­ணை­யாக இருந்து ஒத்துழைக்­க­வேண்­டும்.

"உண்மை, உழைப்பு, நேர்­மையை நம்பி நாம் தேர்­தலை எதிர்­கொண்­டோம். அதி­கார பலம், பண­ப­லம் ஆகி­ய­வற்றை மீறி தேர்­த­லில் நின்­றோம். வெற்றி, தோல்வி சக­ஜம். நமக்­கான காலம் நிச்­ச­யம் வரும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!