ஆத்தூர்: தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து வெள்ளப் பெருக்கில் சிக்கிய தாயையும் சேயையும் காப்பாற்றியவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்டவர்களுக்கு பாராட்டுகள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களின் தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது," என கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணைவாரி அருவியில் கடந்த ஞாயிறன்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டவர்களுள் இருவர் ஆற்றில் தவறி விழும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண், குழந்தை உள்பட ஐவர் சிக்கிக் கொண்டனர். அவர்களை வனத்துறையினர் மீட்டனர். அப்போது பாறை வலுக்கி இரு இளையர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். பின்னர் அவர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர்பிழைத்து உள்ளனர்.

