ஒருவார அரசியல் பயணத்தைத் தொடங்கிய சசிகலாவுக்கு ஆரத்தி

தஞ்சாவூர்: அதி­மு­க­வின் கொடி கட்­டப்­பட்ட காரில் தனது அர­சி­யல் பய­ணத்தை நேற்று தொடங்­கி­னார் சசி­கலா.

மதுரை, தஞ்சை, ராம­நா­த­பு­ரம், நெல்லை ஆகிய மாவட்­டங்­க­ளைத் தொடர்ந்து, அடுத்­த­டுத்த நாள்­களில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் தனது சூறா­வளி சுற்­றுப்­ப­ய­ணம் தொட­ரும் என்­றும் அப்­போது தொண்­டர்­க­ளைச் சந்­திக்க இருப்­ப­தா­க­வும் மாலை­ம­லர் ஊட­கத் தக­வல் தெரி­வித்­துள்­ளது.

சொத்­துக் குவிப்பு வழக்கு தொடர்­பில் சிறைக்கு சென்று விடு­த­லை­யான சசி­கலா, அர­சி­ய­லில் இருந்து வில­கு­வ­தாக அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அதி­முக தொண்­டர்­க­ளோடு கைபே­சி­யில் பேசும் ஒலிப்­ப­தி­வு­கள் வெளி­யாகி பர­ப­ரப்­பூட்­டின.

அண்ைம­யில், 'அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் சசி­கலா' என பொறிக்­கப்­பட்­டி­ருந்த கல்­வெட்டை திறந்­து­வைத்­தது அதி­மு­க­வி­ன­ரி­டம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தியது.

இந்­நி­லை­யில், ஒரு வார­கால அர­சி­யல் பய­ணத்தை சசி­கலா தொடங்­கி­யுள்­ளார். நேற்று சென்­னை­யில் இருந்து தஞ்­சா­வூர் செல்­லும் வழி­யில் 25 இடங்­களில் தொண்­டர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார். இன்று அம­முக பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் மகள் திரு­மண வர­வேற்­பில் பங்­கேற்கிறார்.

நாளை 28ஆம் தேதி மதுரையில் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர், மருது சகோ­த­ரர்­கள் சிலை­க­ளுக்கு மரி­யாதை செலுத்­தி­விட்டு, ஆத­ர­வா­ளர்­க­ளுடன் பேச உள்ளார்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் கூறு­கை­யில், "சசி­க­லாவை கட்­சி­யில் சேர்ப்­பது குறித்து தலை­மைக் கழக நிர்­வா­கி­கள் சேர்ந்து முடி­வெ­டுப்­பார்­கள்," என்­றார். இந்­தக் கருத்­துக்கு அதி­மு­க­வி­னர் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்­கு­மார், கே.பி. முனு­சாமி ஆகி­யோர் சசி­கலா­விற்கு எதி­ராகத் தொடர்ந்து கருத்து தெரி­வித்து வரு­கி­றார்­கள். சசி­க­லாவை கட்­சி­யில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் தெரி­வித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!