நடமாடும் நகைக்கடையாக கிலோ கணக்கில் தங்கம் அணிந்து மலைக்கவைக்கும் தலைவர்

நடமாடும் நகைக்கடையாக கிலோ கணக்கில் தங்கம் அணிந்து மலைக்கவைக்கும் தலைவர்

1 mins read
9ec404e5-39d9-494d-9fc7-9412b06f04f9
-

வேலூர்: வேலூர் மாவட்­டம், காட்­பாடி ஊராட்சி ஒன்­றி­யக்­கு­ழு­வின் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார் திமு­க­வைச் சேர்ந்த வள்­ளி­மலை வேல்­மு­ரு­கன் (படம்: ஊடகம்).

இவ­ரது சொத்து விவ­ரங்­கள் கேட்­ப­வர்­களை மலைக்­க­வைக்­கின்­றன. அவ­ரி­டம் கிலோ கணக்­கில் தங்­கம் இருப்­ப­தா­க­வும் ரூ.22 கோடிக்கு சொத்­து­கள் இருப்­ப­தா­க­வும் உள்ளாட்சித் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், திமு­க­வில் எந்த ஒரு முக்­கி­ய பொறுப்­பி­லும் இல்­லாத வேல்­மு­ரு­கன் தலை­வ­ராகி­யி­ருப்­ப­து­தான் இதர திமு­க­வி­ன­ரி­டம் சூடாக விவா­திக்­கப்­பட்டு வரு­கிறது.

கழுத்­தில் கொத்­து­கொத்­தாக கிலோ கணக்­கில் ெதாங்­கும் தங்­கச் சங்­கி­லி­க­ள், உருளை போன்ற கைக்காப்புகளையும் அணிந்­து­கொண்டு நட­மா­டும் நகைக்­க­டை­யாக வலம் வரு­வ­தில் வேல்­மு­ரு­க­னுக்கு அலா­திப் பிரி­ய­மாம்.

"பெங்­க­ளு­ரில் 500 லாரி­களை வைத்து தொழில் செய்துவரும் வேல்­மு­ரு­கன், மாதத்­தில் சில நாட்­கள் மட்­டுமே காட்­பா­டிக்கு வரு­கிறார்.

"இப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ரைத்­தான் காட்­பாடி ஊராட்சி ஒன்­றி­யக் குழுத்­த­லை­வர் பத­விக்கு நிறுத்தி வெற்­றி­பெற வைத்­துள்­ளனர். காட்­பா­டி­யி­லேயே வாழ்ந்து, திமுகவின் போராட்­டங்­களில் பங்­கேற்று சிறைக்குச் சென்ற ஒரு திமுக நிர்­வாகிகூட அமைச்­சர் துரை­மு­ரு­கன் கண்­ணுக்குப் பட­வில்லை," என்று காட்­பாடி திமுக நிர்­வா­கி­கள் சிலர் வசை பாடி­யுள்­ள­னர்.