'ஜெயலலிதாவின் தனிப்பட்ட சுதந்திரம் பேணவே கேமராக்கள் அகற்றப்பட்டன'

'ஜெயலலிதாவின் தனிப்பட்ட சுதந்திரம் பேணவே கேமராக்கள் அகற்றப்பட்டன'

1 mins read
17f63df9-070c-42e5-80b9-d3f06d589aa3
-

புது­டெல்லி: ஜெய­ல­லி­தா­வுக்கு தனிப்­பட்ட பாது­காப்பு தேவை என்று அப்­போ­தைய தமி­ழக அரசு சார்­பில் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தால்­தான், அவர் தங்­கி­யி­ருந்த வார்­டில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சிசி­டிவி கேம­ராக்­கள் அகற்­றப்­பட்­டன என்று நேற்று உச்ச நீதி­மன்­றத்­தில் நடந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது அப்­போலோ நிர்­வா­கம் விளக்­கம் அளித்­துள்­ளது.

அத்­து­டன், ஜெய­ல­லி­தா­வுக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்சை முறை­கள் குறித்து மருத்­து­வர் குழு­வி­னர்­களி­டம் தாங்­கள் பகிர்ந்­து­கொள்ள தயா­ராக இருப்­ப­தா­க­வும் ஆறு­மு­க­சாமி ஆணை­யம் முன் எங்­கள் மருத்­து­வர்­கள் முன்­னி­லை­யாக மாட்­டார்­கள் என்­றும் அப்­போலோ நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா இறப்­பில் மர்­மம் இருப்­ப­தா­கக் கரு­தப்­படும் நிலை­யில், இது­கு­றித்து விசா­ரிப்­பதற்­காக ஆறு­மு­க­சாமி ஆணை­யம் அமைக்­கப்­பட்­டது. கடந்த சில ஆண்­டு­களில் மருத்­து­வர்­கள் உள்­ளிட்­டோ­ரி­டம் ஆணை­யம் விசா­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­துள்ள அப்­போலோ நிர்­வா­கம், ஆறு­முக­சாமி ஆணை­யம் தொடர்ந்து அப்போலோ நிர்­வா­கத்­தை­யும் மருத்­து­வர்­க­ளை­யுமே விசா­ரித்து வரு­வ­தா­க­வும் மற்ற அர­சி­யல் கட்­சித் தலை­வர்­களை விசா­ரிக்­கா­மல் ஒரு­த­லை­பட்­ச­மாக நடந்து கொள்­வ­தா­க­வும் புகார் கூறி­யுள்­ளது.