உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம்

1 mins read
1ecdd83a-dd43-4b01-85a4-2a9ee7817b3a
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் (முதல் வரிசையில், இடக்கோடி) இருக்கும் புகைப்படம். படம்: தினமணி -

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் வெற்றிபெற்றிருந்தனர். அவர்களை நடிகர் விஜய் நேற்று முன்தினம் (அக்டோபர் 25) பனையூரில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

அப்போது அவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களையும் அவர் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு உள்ள மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்தற்காகவே தற்போது இந்தப் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இது அவரின் அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்