டிசம்பரில் பொதுக்குழு: வரிந்து கட்டும் ஓபிஎஸ், பழனிசாமி

டிசம்பரில் பொதுக்குழு: வரிந்து கட்டும் ஓபிஎஸ், பழனிசாமி

2 mins read
c79c9b6f-b966-4476-ba4e-01bfb0dcbb70
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீர்செல்வம் (இடது), எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம் -

பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற பணம், பதவி என பேரம்

சென்னை: அதி­முக தலை­மைப் பத­வி­யைக் கைப்­பற்­று­வ­தில் அக்­கட்­சி­யின் ஒருக்­கி­ணைப்­பா­ளர்­க­ளான ஓ.பன்­னீர்­செல்­வம், எடப்­பாடி பழ­னி­சாமி இடையே மோதல் வெடித்­தி­ருப்­ப­தாக தமி­ழக ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வ­ரும் டிசம்­பர் மாதம் அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற உள்ள நிலை­யில், இந்த மோதல் மிக விரை­வில் பகி­ரங்­க­மாக வெடிக்­கும் என அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கணித்­துள்­ள­னர்.

வரும் டிசம்­ப­ரில் அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற உள்­ளது. அச்­ச­ம­யம் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார். இந்­தப் பத­வி­யைக் கைப்­பற்­று­வ­தில் ஓபி­எஸ், எடப்­பாடி ஆகிய இரு­வ­ரும் முனைப்­பாக உள்­ள­னர்.

இதை­ய­டுத்து, கட்­சிக்­கும் தங்­க­ளுக்­குள்ள ஆத­ர­வா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, அணி­தி­ரட்டி வரு­கின்­ற­னர். முன்­னாள் எம்­எல்ஏ ஜெசிடி பிர­பா­க­ரனை கட்­சி­யின் அவைத்­த­லை­வ­ராக நிய­மிக்க வேண்­டும் என ஓபி­எஸ் தரப்பு வலி­யு­றுத்தி உள்­ளது.

ஆனால், எடப்­பாடி தரப்போ, முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மாரோ இந்த பத­விக்கு முன்­னி­றுத்­து­கிறது.

காலஞ்­சென்ற அதி­முக அவைத்­த­லை­வர் மது­சூ­த­ன­னைப் போலவே ஜெயக்­கு­மா­ரும் வட சென்­னை­யில் செல்­வாக்கு மிக்­க­வர்.

தற்­போது உள்ள ஏற்­பாட்­டின்­படி, கட்­சிக்கு இரட்­டைத் தலைமை நீடிக்­கட்­டும் என எடப்­பாடி தரப்பு முடி­வெ­டுத்­தால், அதற்கு உடன்­பட ஓபி­எஸ் முன்­வ­ரு­வார் என்­றும் ஒற்­றைத்­த­லைமை என்­றால் அவ­ரும் களத்­தில் மோது­வார் என்­றும் ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் கூறு­வ­தாக 'தின­க­ரன்' ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இரு­த­ரப்­பி­ன­ரும் கட்­சி­யில் உள்ள நிர்­வா­கி­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்து வரு­கின்­ற­னர். பணம், பதவி என்று பேரம் பேசப்­ப­டு­கிறது என்­றும் ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சசி­க­லா­வுக்கு மறை­முக ஆத­ரவு தெரி­வித்து ஓபி­எஸ் பேசி வரு­வது உன்­னிப்­பா­கக் கவ­னிக்­கப்­ப­டு­கிறது. அதி­மு­க­வில் இன்­ற­ள­வும் நீடிக்­கும் சசி­க­லா­வின் அனு­தா­பி­க­ளு­டைய ஆத­ர­வை­யும் பெறு­வ­தற்­கா­கவே ஓபி­எஸ் காய்­களை நகர்த்­து­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

அடுத்த சில வாரங்­க­ளுக்­குள் ஒற்­றைத்­த­லை­மையா இரட்­டைத்­தலை­மையா என்­பதை முடிவு செய்ய வேண்­டும் என எடப்­பாடி தரப்­புக்கு ஓபி­எஸ் கெடு விடுத்­துள்­ளார். இது தொடர்­பாக எடப்­பாடி பழ­னி­சாமி எடுக்­கும் முடி­வைப் பொறுத்தே அதி­மு­க­வில் மோதல் வெடிக்­குமா, கட்சி மீண்­டும் இரண்­டா­கப் பிள­வு­ப­டுமா என்­பது தெரிய வரும் என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள்.