பட்டாசுக் கடையில் தீ விபத்து: ஆறு பேர் பரிதாப பலி

கள்­ளக்­கு­றிச்சி: பட்­டா­சுக் கடை­யில் ஏற்­பட்ட பயங்­கர தீ விபத்­தில் ஆறு பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் சங்­க­ரா­பு­ரம் பகு­தி­யில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இந்த விபத்­தில் படு­கா­யம் அடைந்­த­வர்­க­ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

தீபா­வளி பண்­டிகை நெருங்கி வரும் நிலை­யில், தமி­ழ­கம் முழு­வ­தும் பட்­டா­சு­கள் விற்­பனை களை­கட்டி உள்­ளது. பல்­வேறு நிபந்­த­னை­கள், கட்­டுப்­பா­டு­க­ளு­டன் பட்­டா­சுக் கடை­க­ளைத் திறக்க அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், சங்­க­ரா­பு­ரத்­தில் முரு­கன் என்­ப­வர் பட்­டா­சுக் கடை வைக்க அனு­மதி பெற்­றி­ருந்­தார். நேற்று முன்­தி­னம் இரவு இவ­ரது கடை­யில் ஊழி­யர்­கள் வேலை பார்த்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது திடீ­ரென பட்­டா­சு­கள் வெடிக்­கத் தொடங்­கின. ஒன்­றன்­பின் ஒன்­றாக வெடித்­துச் சித­றிய பட்­டா­சு­கள் ஏற்­ப­டுத்­திய தீப்­பி­ழம்பு கார­ண­மாக மொத்த கடை­யும் பற்றி எரிந்­தது.

இதில் கடை­யில் இருந்த ஆறு பேரும் உடல் கருகி அங்­கேயே பலி­யா­கி­னர். பத்­துக்­கும் மேற்­பட்­டோர் படு­கா­யம் அடைந்த நிலை­யில் சங்­க­ரா­பு­ரம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். பட்­டாசு கடை பற்றி எரி­யும் காட்­சி­கள் கொண்ட புகைப்­ப­டங்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!