வேளாண் துறையில் ரூ.1,000 கோடி ஊழல்: விவசாய சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

மதுரை: வேளாண்­மைத் துறை­யில் ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்­துள்­ள­தாக உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இது தொடர்­பான மனுவை விசா­ரித்த நீதி­பதி, முழு­மை­யான ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்ய வேண்­டும் என மனு­தா­ர­ருக்கு அறி­வு­றுத்தி உள்­ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வேளாண்­மைத்­து­றை­யில் நடந்­துள்ள ஊழல்­கள் குறித்து விசா­ரிக்­கக் கோரி திருச்­சி­யைச் சேர்ந்த விவ­சா­யி­கள் சங்­கத் தலை­வர் அப்­துல்லா என்­ப­வர் மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை­யில் அண்­மை­யில் மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

அதில், கடந்த 2013இல் இருந்து வேளாண்­மைத்­துறை முன்­னாள் இயக்­கு­நர் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் சொட்­டு­நீர் பாசன கரு­வி­கள் வாங்­கி­யது, இயந்­திர கொள்­மு­தல், விதை கொள்­மு­தல், கணினி பொருள்­கள் வாங்­கி­யது உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­களில் ஊழல் செய்­துள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தா­க­வும் இந்த மோசடி, முறை­கேடு தொடர்­பாக விசா­ரித்து தொடர்­பு­டைய அதி­கா­ரி­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு லஞ்ச ஒழிப்­புத் துறைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்­றும் அப்­துல்லா தமது மனு­வில் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மனுவை விசா­ரித்த நீதி­ப­தி­கள், போது­மான ஆவ­ணங்­கள் இல்­லா­மல் குற்­றம்­சாட்ட முடி­யாது என்­ற­னர்.

"தேவைப்­பட்­டால் எதிர்­கா­லத்­தில் இத்­த­கைய மனு­வைத் தாக்­கல் செய்­யும்­போது முழு­மை­யான ஆவ­ணங்­க­ளை­யும் மனு­தா­ரர் சேர்க்க வேண்­டும்," என்று குறிப்­பிட்டு நீதி­ப­தி­கள் மனுவை முடித்து வைத்­த­னர்.

இதை­ய­டுத்து, உரிய ஆவ­ணங்­க­ளு­டன் மீண்­டும் வழக்கு தொடுக்க இருப்­ப­தாக அப்­துல்லா தரப்பு கூறி­ய­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!