இரண்டாவது பாலியல் வழக்கு: பிணை பெற்றார் சிவசங்கர் பாபா

இரண்டாவது பாலியல் வழக்கு: பிணை பெற்றார் சிவசங்கர் பாபா

1 mins read
27f69fe8-381d-4d0e-8cf1-626b89d55774
-
Google News Preferred Icon

சென்னை: பாலியல் வழக்கில் கைதாகி உள்ள சிவசங்கர் பாபாவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது.

பள்ளி மாணவிகள் சிலர் அளித்த புகாரின் பேரில் கைதாகி உள்ளார் சிவசங்கர் பாபா. போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் தாக்கல் செய்த பிணை மனு தள்ளுபடியானது.

பின்னர், மீண்டும் மனுத்தாக்கல் செய்ததில் ஒரு வழக்கில் பிணை கிடைத்தது.

இந்நிலையில், இரண்டாவது வழக்கில் பிணை கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது வழக்கைக் கையாளும் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. இதையடுத்து மூன்றாவது வழக்கில் பிணை வழங்கக் கோரி அவரது தரப்பு மனு செய்துள்ளது.