முன்னாள் முதல்வரின் உதவியாளர் கைது

முன்னாள் முதல்வரின் உதவியாளர் கைது

1 mins read
de0f3058-5578-40ee-8fb4-3094a6989737
-

சேலம்: பண மோசடி புகா­ரின் பேரில் முன்­னாள் முதல்­வர் பழ­னி­சா­மி­யின் உத­வி­யா­ள­ரான மணி கைதாகி உள்­ளார்.

45 வய­தான இவர், அரசு வேலை வாங்­கித் தரு­வ­தாக பல­ரி­டம் பணம் வசூ­லித்து, வேலை பெற்­றுத் தரா­மல், பணத்­தை­யும் திருப்பி அளிக்­கா­மல் மோசடி செய்­தார் என்­பது குற்­றச்­சாட்டு.

அரசு போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தில் தமக்கு உதவி பொறி­யி­ய­லா­ளர் பணி வாங்­கித் தரு­வ­தற்­காக மணி, ரூ.17 லட்­சம் பெற்­றுக்­கொண்டு தம்மை ஏமாற்­றி­ய­தாக கட­லூ­ரைச் சேர்ந்த தமிழ்ச்­செல்­வன் என்­ப­வர், சேலம் காவல்­து­றை­யில் அண்­மை­யில் புகார் அளித்­தார்.

அதன் பேரில் மணி உட்­பட இரு­வர் மீது வழக்­குப் பதி­வா­னது. இதே­போல் அதி­முக நிர்­வாகி ஒரு­வ­ரி­ட­மும் மணி ரூ.77 லட்­சம் பெற்று ஏமாற்­றி­ய­தாக ஏற்­கெ­னவே போலி­சில் புகார் அளிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், முன்­னாள் முதல்­வ­ரின் உத­வி­யா­ள­ராக பத்து ஆண்­டு­கள் பணி­யாற்­றிய மணி தலை­ம­றை­வானது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.