கடல்பாசி விவசாயத்தில் பெண்கள் ஈடுபாடு

கடல்பாசி விவசாயத்தில் பெண்கள் ஈடுபாடு

2 mins read
145f64ed-1db1-4252-a36e-c2088996d470
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் கடற்பகுதியில் விளைந்த கடல்பாசியை கையில் எடுத்துக் காட்டும் பெண்கள். இந்த கடல்பாசி விவசாயத்தால் பெண்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். படம்: எஎஃப்பி -

ராமேஸ்­வ­ரம்: நளி­ன­மாக சேலை அணிந்து, அதன் மேல் சட்­டை­யைப் போட்­டுக்­கொண்டு திரு­மதி லட்­சுமி முரு­கே­சன் கடல் நீருக்­குள் குதித்து மரங்­களை விட­வும் அதிக அள­வில் கரி­ய­மில வாயுவை உறிஞ்­சும் அதி­சய பயிர் என்று விஞ்­ஞா­னி­க­ளால் பாராட்­டப்­படும் கடற்­பா­சி­யைச் சேக­ரித்து வரு­கி­றார்.

சீனா, அமெ­ரிக்­கா­விற்கு அடுத்த படி­யாக உல­கின் மூன்­றா­வது பெரிய கரி­ய­மில வாயு­வால் மாசு­படும் நாடாக இந்­தியா உள்­ளது.

கடல்­பாசி கரி­ய­மில வாயுவை அதி­க­மாக உறிஞ்சி உயிர்­வா­யுவை அதி­க­மா­கக் ெகாடுக்­கிறது. இத­னால், மனி­தர்­கள், மீன்­க­ளுக்கு நன்ைம பயக்­கிறது.

இந்த கடற்­பாசி வளர்ப்­பி­னால் கடல் அமி­ல­ம­ய­மா­வதை மாற்­ற­வும் கடல் சூழலை மேம்­ப­டுத்­த­வும் கரை­யோ­ரம் வசிக்­கும் மக்­க­ளுக்கு நிலை­யான வாழ்­வா­தா­ரத்தை வழங்­க­வும் எவ்­வாறு உத­வ­லாம் என்­பதை அதி­கா­ரி­கள் ஆராய்ந்து வரு­கின்­ற­னர்.

"நான் என் குழந்­தை­க­ளுக்­காக இந்த கடின உழைப்­பில் ஈடு­படு கிறேன். எனது நான்கு மாத உழைப்­பின் மூலம் என்­னால் நல்ல லாபம் பார்க்­க­மு­டி­கிறது," என்று சொல்­லும் திரு­மதி முரு­கே­சன், ஒவ்­வொரு மாத­மும் கடல்­பாசி சேக ரிப்­பில் ரூ.20,000 (S$359) சம்­பா­திப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"இத­னால் என் குழந்­தை­க­ளைக் கல்­லூ­ரிக்கு அனுப்­ப­மு­டி­கிறது," என்றும் அவர் மேலும் கூறி­னார்.

"கடல்­பாசி பல வழி­க­ளி­லும் ஓர் அதி­சய பயி­ராக விளங்­கு­கிறது. இதற்கு நிலம், நன்­னீர், உரம், பூச்­சிக்­கொல்லி மருந்து தேவையில்லை.

"இது கரி­ய­மிலவாயுவை மரங்­களை விட­வும் ஐந்து மடங்கு அதி­கம் உறிஞ்சி உயிர்­வா­யுவை வெளி­யி­டு­கிறது," என்று அரசு கடல்­சார் விஞ்­ஞானி டாக்­டர் எம்.கணே­சன் ஏஎ­ஃப்பி ஊட­கத்­தி­டம் கூறி­னார்.

8,000 கி.மீ. கடற்­க­ரை­யைக் கொண்ட இந்­தியா, தற்­போ­தைய கடல்­பாசி உற்­பத்­தியை 30,000 டன்­களில் இருந்து 2025ஆம் ஆண்­டிற்­குள் ஒரு மில்­லி­யன் டன்­னாக உயர்த்த இலக்கு கொண்­டுள்­ளது.

அக்­வாக்­ரி­யின் நிர்­வாக இயக்­கு­நர் அபி­ராம் சேத் ஏஎ­ஃப்பி ஊட­கத்­தி­டம் கூறு­கை­யில்,"கடற்­பா­சி­கள் தண்­ணீ­ரைச் சுத்­தப்­ப­டுத்­து­கின்­றன. அதே­நே­ரத்­தில் கடற்­பாசி பயி­ரி­டு­ப­வர்­கள் வேலை தேடு­வ­தற்­காக நகர்ப்­பு­றங்­க­ளுக்கு இடம்­பெ­ய­ரா­மல் நிலை­யான வரு­மா­னத்­தைப் பெறு­கி­றார்­கள்," என்­றார்.

கடல்­பாசி விவ­சாயி விஜயா கூறு­கை­யில், "நாங்­கள் கட­லில் நிறைய ஆபத்­து­களை எதிர்­கொள்­கி­றோம், ஆனால் இந்த வேலை எனக்­கும் எனது குடும்­பத்­திற்­கும் நல்ல ஒரு கௌர­வத்தை அளித்­துள்­ளது," என்­ற­வர், "எங்­கள் வாழ்க்­கைத் தரம் மேம்­பட்­டுள்­ளது, இப்­போது எனது கிரா­மத்­தில் உள்ள மற்­ற­வர்­களும் கடற்­பாசி விவ­சா­யி­க­ளாக மாற விரும்­பு­கி­றார்­கள்." என்­றார்.