நகைக்கடனில் பல கோடி ரூபாய் முறைகேடு

1 mins read
a4f4d45a-f2ba-4d32-b8cd-79289cdc2997
-

மதுரை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கொடுத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகத்தை ஆய்வு செய்தபோது இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு போலி நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல வங்கிகளில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.