சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஓரளவு கணிசமான இடங்களில் வெற்றிபெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கம், அடுத்ததாக விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் களமிறங்க உள்ளதாக கூறியுள்ளது.
ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 விஜய் ரசிகர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அவர்களை அண்மையில் சந்தித்துப் பேசிய விஜய், "மக்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்து, மக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள்," என அறிவுறுத்தினார்.
தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள மக்கள் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், "தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைையத் தீர்க்க, அதை மத்திய-மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு விஜய் கூறியிருக்கிறார். அதன்படி, மக்கள் பணிகளைத் தொடர்வோம்," என்றார்.