கோடநாடு வழக்கு: கனகராஜ் உறவினரை விசாரிக்க அனுமதி

கோடநாடு வழக்கு: கனகராஜ் உறவினரை விசாரிக்க அனுமதி

2 mins read
c108dc23-ccdc-4ce4-aed5-2261d561f9c5
-

நீலகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த சம்பவத்தில் தடயங்களை அழித்த குற்றச்சாட்டின் தொடர்பில் கைதாகியுள்ள ரமேஷை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் கனகராஜின் அண்ணன் தனபாலை ஐந்து நாள் கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதியளித்த நீதிமன்றம், இதேபோல் ரமேஷையும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

கனகராஜ் உயி­ரி­ழந்த சம்பவத்தில் பதிவான தடயங்களை அழித்­த­தாக கன­க­ரா­ஜின் அண்ணன் தனபாலையும் அவ­ரது உற­வி­னர் ரமேஷையும் போலி­சார் கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர்.

நீல­கிரி மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி சஞ்­சய் பாபா, குற்­ற­வா­ளி­கள் இரு­வ­ரை­யும் வரும் நவம்­பர் மாதம் 8ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்க உத்­த­ர­விட்­டார்.

இதை­ய­டுத்து, கூட­லூர் சிறை­யில் அவர்­கள் அடைக்­கப்­பட்­ட­னர்.

கடந்த 2017ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்­பல் கோட­நாடு பங்­க­ளா­வில் கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­டது. அப்­போது இரவு நேர காவ­லா­ளி­யாக இருந்த ஓம்­ப­க­தூர் கொலை செய்­யப்­பட்­டார். அத்­து­டன் பங்­க­ளா­வில் இருந்த பொருட்­களும் கொள்ளை அடிக்­கப்­பட்­டன.

கன­க­ராஜின் கைபே­சி­யில் பதி­வான ஆதா­ரங்­களை அழித்­துள்ள­தா­க­வும் இவ்­வ­ழக்­கின் முக்­கிய சாட்­சி­க­ளைத் தனிப்­பட்ட முறை­யில் அணுகி விசா­ர­ணையில் குறிப்பிட்ட சில தக­வல்­களை மட்­டுமே சொல்­ல­வேண்­டு­ம் என தனபாலும் ரமேஷும் வலியுறுத்தியதும் தெரி­ய­வந்­தது.

இதற்கிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.