கார்-லாரி மோதியதில் அரசு மருத்துவர் உள்பட மூவர் மரணம்

கார்-லாரி மோதியதில் அரசு மருத்துவர் உள்பட மூவர் மரணம்

1 mins read
9334be9d-a248-458c-b51f-9ed3829cbc15
விபத்தில் சிக்கிய காரும் லாரியும். படங்கள்: தமிழக ஊடகம் -

பவானி: பவானி அருகே காரும் லாரி­யும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்­தில் காரில் பய­ணம் செய்த அரசு மருத்­து­வர் உள்­பட மூவர் உயி­ரி­ழந்­த­னர்.

சேலம் மாவட்­டம், உடை­ய­னூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் தேவ­நா­தன், 53. இவ­ரது மனைவி இந்­தி­ராணி, 51. இவர் மேட்­டூரை அடுத்த வன­வாசி அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

தம்­ப­தி­யர் இரு­வ­ரும் மேட்­டூர், சுப்­பி­ர­ம­ணி­யம் நக­ரைச் சேர்ந்த சத்­தி­ய­சீ­லன், 24, என்­னும் இளை­ஞரை அழைத்­துக் கொண்டு கோவை­யில் உள்ள மருத்­து­வ­ம­னைக்கு காரில் சென்று விட்டு மேட்டூருக்குத் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்போது, நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு நேரத்­தில் கோவை­யில் இருந்து காரை தேவ­நா­தன் ஓட்டி வந்­துள்­ளார்.

பவானி மேட்­டூர் சாலை­யில் கார் சென்று கொண்­டி­ருந்­த­போது எதிரே வந்த லாரி, காரின் மீது படுவேகமாக மோதி­ய­தில் மூவ­ரும் உயி­ரி­ழந்­த­னர். பொதுமக்கள் அழைப்பை அடுத்து விபத்து நடந்த இடத்துக்கு வந்த தீய­ணைப்­புப் படை­யி­ன­ரும் பவானி போலி­சா­ரும் ஒரு மணி நேரமாகப் போராடி உடல்­களை மீட்­ட­னர்.