கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நேற்று தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.