வண்டலூர்: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 26ஆம் தேதியன்று கவிதா என்ற 19 வயது பெண் சிங்கம் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் ஏழு நெருப்புக் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, மீதம் உள்ள நெருப்புக்கோழிகளை வண்டலூர் பூங்கா நிர்வாகிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே எதனால் நெருப்புக்கோழிகள் உயிரிழந்தன என்பது முழுமையாகத் தெரியவரும். ரத்த மாதிரிகள், உடல் உறுப்புகள் ஆய்வின்போது காலராவால் அவை பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.