சென்னை: நாளை முதல் பள்ளிக்கு வருகை அளிக்கும் மாணவர்களுக்கு நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை எவ்வாறு வரவேற்போமோ அதேபோல் முகமலர்ச்சியுடனும் நேசத்துடனும் வரவேற்பு கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்காக பள்ளிகளைச் சுத்தப் படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.