சென்னை: தமிழகத்தில் ஏழாம் கட்ட தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நேற்று நடைபெற்றது. தலைநகர் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தலைதூக்கவிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்துவருகிறது.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப் பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடாமல் உள்ள 60 லட்சம் பேரைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.