தாயின் ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையில் திருமணம்

தாயின் ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையில் திருமணம்

1 mins read
47e45ea2-7d65-4847-8ec1-6932d6359ef8
உடல்நலம் தேறாமல் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயின் ஆசையை நிறை­வேற்ற திரு­ம­ணம் செய்­துகொண்ட மணமகன். படம்: ஊடகம் -

விழுப்புரம்: கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, கடந்த சில நாள்­க­ளாகவே உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயின் ஆசையை மகன் பூர்த்தி செய்திருப்பது நெகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

விழுப்­பு­ரம், திருக்­காமு நக­ரைச் சேர்ந்த தயா­ளன், அரசுப் பள்ளியில் எழுத்­த­ரா­கப் பணி­பு­ரிந்து வருகிறார். இவ­ருக்கு 40 வய­தா­கி­யும் ஒரு பெண்­ணும் பொருத்­தப்­பட்டு வராத தால் திரு­மணத்தை தள்­ளிப்­போட்­டுக்கொண்டே வந்­தார்.

இந்­நி­லை­யில், இவ­ரது தாய் முத்­தா­லம்­மாள், 67, கடந்த சில நாட்­க­ளாக கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, விழுப்­பு­ரம் அரசு மருத்­து­வ­மனை­யில், உடல்­ந­லன் இன்­னும் தேறாத நிலை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

முத்­தா­லம்­மாள் தனது மகன் தயாள­னுக்குத் திரு­ம­ணம் செய்து பார்க்­க­மு­டி­ய­வில்­லையே என கண் கலங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­றிந்த தயா­ளன், தனது தாயைப் பார்ப்­ப­தற்­காக மருத்துவ மனைக்கு வந்­தி­ருந்த மாமன் மகள் காயத்­ரியை, 30, உட­ன­டி­யா­கத் திரு­மணம் செய்துகொண்­டார்.

மருத்­து­வ­மனை வளா­கம் அரு­கி­லுள்ள அம்­மன் கோவி­லில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 3:45 மணிக்கு காயத்­ரி-தயாளன் திருமணம் நடந்தது. அதன்பிறகு தாயி­டம் ஆசி வாங்க மருத்­து­வ­ம­னைக்கு மண­மக்­கள் சென்­றபோது, வார்­டி­னுள் செல்ல மருத்­து­வர்­கள் அனு­ம­தி மறுத்துவிட்டனர். இதையடுத்து, தாங்கள் திருமணம் செய்த தகவ லைத் தாயி­டம் சொல்லும்படி கூறி­விட்டு வீடு­தி­ரும்­பி­னர்.