அஞ்சல் நிலையம் மூலம் கங்கை நீர் விநியோகம்

அஞ்சல் நிலையம் மூலம் கங்கை நீர் விநியோகம்

1 mins read
f3c50ba8-d9c9-41d2-9a2a-f216eb796c16
-

திரு­வள்­ளூர்: தீபா­வளி பண்­டி­கையை ஒட்டி திரு­வள்­ளு­வர் மாவட்­டத்­தில் அஞ்­சல் நிலை­யங்­கள் மூலம் கங்கை நீர் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

30 ரூபாய்க்கு கங்கை நீர் விற்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதை வாங்கி பொது­மக்­கள் பயன்­பெ­ற­லாம் என்­றும் அஞ்­சல் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தீபா­வளி அன்று கங்கை நீரில் நீராடி பொது­மக்­கள் அந்­நா­ளைக் கொண்­டா­டு­வது வழக்­க­மாக உள்­ளது.

இதைக் கருத்­தில் கொண்டு குறைந்த விலைக்கு கங்கை நீர் விற்­கப்­ப­டு­வ­தாக திரு­வள்­ளு­வர் அஞ்­சல்­துறை அதி­காரி முரளி தெரி­வித்­துள்­ளார். 53 துணை அஞ்­ச­ல­கங்­கள் மூலம் கங்கை நீர் விற்­கப்­ப­டு­வ­தா­க­வும் இதற்கு வர­வேற்பு கிடைத்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.