அரசு: தடையை மீறி சரவெடி வெடித்தால் நடவடிக்கை

அரசு: தடையை மீறி சரவெடி வெடித்தால் நடவடிக்கை

2 mins read
1b5d0d10-a906-4647-b494-e8d442165c00
ரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் படுகின்றன. படம்: ஊடகம் -

பட்டாசு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என விற்பனையாளர்கள் கவலை

சென்னை: தடையை மீறி சர­வெடிப் பட்­டா­சு­களை வெடித்­தால் குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக உச்ச நீதி­மன்­றம் பிறப்­பித்­துள்ள உத்­த­ரவைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள தமி­ழக அரசு, அந்த உத்­த­ரவை அனை­வ­ரும் முழுமை­யா­கப் பின்­பற்ற வேண்­டும் என அறிக்கை ஒன்­றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தீபா­வளி அன்று இரண்டு மணி நேரம் மட்­டுமே பட்­டாசு வெடிக்­கலாம் என்று உத்­த­ர­விட்­டுள்ள உச்ச நீதி­மன்­றம், அதிக ஒலி­களை எழுப்­பக்­கூ­டிய பட்­டா­சு­களை விற்­ப­தற்­கும் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது.

தனி­ந­பர்­க­ளின் மகிழ்ச்­சிக்­காக நாடு முழு­வ­தும் உள்ள முதி­யோர், சிறார்­க­ளின் உடல் நலத்­தை­யும் உயி­ரை­யும் பாதிக்­கக்­கூ­டிய பட்­டா­சு­களை அனு­ம­திக்க இய­லாது என்­றும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் தங்­க­ளது உத்­த­ர­வில் குறிப்­பிட்­டுள்ள­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழக அர­சும் தன் பங்­குக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக அரசு வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், 'பேரி­யம் நைட்­ரேட்' போன்ற ரசா­யனங்­க­ளைக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட பட்­டா­சு­கள், அதிக நேரம் வெடிக்­கக் கூடிய சர­வெடி பட்­டா­சு­கள், அதிக சத்­தம் எழுப்­பக்­கூ­டிய, சுற்­றுச்­சூ­ழ­லுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பட்­டா­சு­கள் ஆகி­ய­வற்றை வெடித்­தால் குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனி­னும், சாதா­ரண வகைப் பட்­டா­சு­களை வெடிக்க எந்­த­வி­தத் தடை­யும் இல்லை என்­றும் அரசு தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.

இதற்­கி­டையே, இந்த ஆண்டு பட்­டாசு விற்­பனை எதிர்­பார்த்த அளவு இல்லை என விற்­ப­னை­யாளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சிவ­காசி, விரு­து­ந­கர், சாத்­தூர், திரு­வில்­லி­புத்­தூர், ராஜ­பா­ளை­யம் நக­ரப் பகு­தி­களில் இம்­முறை சுமார் 1,500 பட்­டா­சு­க் கடை­களைத் திறக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா நெருக்­கடி நன்கு கட்­டுக்­குள் வந்­தி­ருப்­ப­தால் பட்­டாசு விற்­பனை களை­கட்­டும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இத­னால் பல பட்­டாசு தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் விலை­யில் பல்­வேறு தள்­ளு­ப­டி­களை அறி­வித்­தன.

எனி­னும் விற்­பனை அதிகரிக்க­வில்லை என்­றும் பல்வேறு தக­வல் தொழில்­நுட்ப நிறுவனங்­களும் அதன் ஊழி­யர்­கள் பலரும் இம்­முறை பட்­டா­சு­கள் வாங்­கு­வ­தில் ஆர்­வம் காட்­ட­வில்லை என்­றும் விற்­ப­னை­யா­ளர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். சென்னையிலும் பட்டாசு விற்பனை மந்தமாகவே உள்ளது.