ஈரோடு நிறுவனத்திலிருந்து ரூ.200 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

ஈரோடு நிறுவனத்திலிருந்து ரூ.200 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

1 mins read
02e626ce-f5f7-44c8-88a6-3daec8735dd0
-

ஈரோடு: வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்டை அடுத்து, ஈரோட்­டில் செயல்­பட்டு வரும் எஸ்­கே­எம் நிறு­வ­னத்­தி­லும் அதற்­குச் சொந்­த­மான 11 இடங்­க­ளி­லும் வரு­மான வரித்­துறையினர் அதி­ர­டிச் சோதனை நடத்­தி­னர்.

அப்­போது, 200 கோடி ரூபாய் மதிப்­புள்ள, கணக்­கில் காட்­டப்­ப­டாத சொத்து ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

தனி­யார் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான ஆலை­கள், அலு­வல­கங்­கள் சோளாங்­க­பா­ளை­யம், ஊத்­துக்­குளி, ஈரோடு உள்­ளிட்ட இடங்­களில் உள்­ளன.

இந்­நி­லை­யில், கடந்த 27ஆம் தேதி முதல் இந்த இடங்­களில் வரு­மான வரித்­துறையினர் தொடர் சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர். அப்­போது 200 கோடி ரூபாய் மதிப்­பி­லான பல்­வேறு சொத்து ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

அந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

கணக்­கில் காட்­டப்­ப­டாத தொகை, சொத்­து­கள் அதி­கா­ரி­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்த சொத்­து­கள் எந்த வகை­யில் வாங்­கப்­பட்­டன என்­பது குறித்து விசா­ரிக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த சோதனை நட­வ­டிக்கை முடி­வ­டைந்த நிலை­யில், அடுத்து வரும் நாள்­களில் கைது நட­வ­டிக்­கை­கள் தொடங்­கும் என எதிர்­பார்க்­க­ப­டு­கிறது. இது­கு­றித்து அதி­கா­ரி­கள் தரப்­பில் மேல­தி­கத் தக­வல்­கள் ஏதும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

அண்­மைய சில மாதங்­க­ளாக வரி ஏய்ப்பு செய்­வ­தாகக் கரு­தப்­படும் நிறு­வ­னங்­க­ளைக் குறி­வைத்து வரு­மான வரித்­துறை அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.