ரஜினியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர்

ரஜினியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர்

1 mins read
fdc6865d-0cf8-48ca-bbd6-7d13a2230498
-

சென்னை: நடி­கர் ரஜி­னி­யின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக மருத்து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, நேற்று மாலை நில­வ­ரப்­படி, அவர் எந்த நேரத்­திலும் வீடு திரும்ப வாய்ப்­புள்­ள­தாக அவரது வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

முன்­ன­தாக, முதல்­வர் மு.க.ஸ்டாலின் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்று அவ­ரது உடல்­ந­லம் குறித்து விசா­ரித்து அறிந்­தார்.

'தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற பிறகு சென்னை திரும்­பிய ரஜி­னிக்கு திடீர் உடல்­ந­லக் குறைவு ஏற்­பட்­டது. இத­னால் மருத்­துவ­ மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அவ­ருக்கு மூளைக்­குச் செல்­லும் ரத்­தக்­கு­ழா­யில் சிறிய அடைப்பு ஏற்­பட்­டுள்­ளது தெரிய வந்­தது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்­டதை அடுத்து, அவர் உடல்­ந­லம் தேறி வரு­வ­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­தது.

கட­வுள் அரு­ளால் தம் தந்தை நல­மாக இருப்­ப­தாக ரஜி­னி­யின் மகள் சவுந்­தர்யா கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, ரஜி­னியை நேரில் சந்­தித்து உடல்­ந­லம் குறித்து விசா­ரித்­தார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.மேலும், மருத்­து­வ­ரி­ட­மும் பேசி விவ­ரங்­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

ரஜி­னி­காந்த் விரை­வில் உடல்­ந­லம் தேற வேண்­டும் என ரசி­கர்­கள் பிரார்த்­தனை செய்து வரும் நிலை­யில், பல்­வேறு பிர­ப­லங்­களும் திரை­யு­ல­கத்­தி­ன­ரும் அவர் உடல்­ந­லம் தேற வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

ரஜி­னி­யின் நண்­ப­ரும் நடி­க­ரு­மான கமல்­ஹா­சன் மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்று ரஜி­னி­யைப் பார்க்க இருப்­ப­தாக சமூக வலைத்­த­ளங்­களில் ஒரு தக­வல் வெளி­யா­னது. எனி­னும் அது உண்­மை­யல்ல என்று பின்­னர் கூறப்­பட்­டது.