சென்னை: பெண் போலிசாரைக் கிண்டல் செய்த இருவரை சென்னை போலிசார் கைது செய்தனர்.
இருவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்விரு ஆடவர்களும் பெண் போலிசாரைக் கிண்டல் செய் தனர்.
இதையடுத்து, பெண் போலிசார் அளித்த புகாரின் பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.