தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்திக்கொத்து

1 mins read
9471295b-13c6-4c87-8458-82e3af290f46
-

கபாலீஸ்வரர் கலை கல்லூரி

அதிகாரபூர்வமாகத் திறப்பு

சென்னை: சென்னை கொளத்துாரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள, கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரியை முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கொளத்துாரில் சோமநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கல்லுாரியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த மாதம் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 210 மாணவ, மாணவியர் இதில் சேர்ந்துள்ளனர்.

திமுக நிர்வாகிகள் மீது பாஜக

பெண் நிர்வாகிகள் புகார்

சென்னை: தமிழக பாரதிய ஜனதா பெண் நிர்வாகிகள், அவதூறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணை யத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மாவை, தமிழக பாஜக செயலர் சுமதி வெங்கடேஷ், கலை, கலாசாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் ஆகியோர் திங்கள்கிழமை அன்று சந்தித்துப் பேசினர். அப்போது சுமதி வெங்கடேசை போலிசார் தாக்கியதாகவும் காயத்ரி ரகுராமை தரக்குறைவாக சித்திரித்து 'வீடியோ' வெளியிட்ட திமுக நிர்வாகிகள் மீது புகார் அளித்தும் போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேசிய மகளிர் ஆணையத் தலைவரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.