விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த 2,282 பேர் மீது வழக்கு; 48 டன் கழிவுகள் அகற்றம் தமிழகத்ைதச் சூழ்ந்த புகைமூட்டம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த 2,282 பேர் மீது வழக்கு; 48 டன் கழிவுகள் அகற்றம் தமிழகத்ைதச் சூழ்ந்த புகைமூட்டம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 mins read
526f4a82-c378-4582-a985-da3b8501daaf
தீபாவளிக்கு காலை ஒரு மணி நேரம், இரவு ஒரு மணி நேரம் என பட்டாசு வெடிக்க அரசு அனுமதித்து இருந்தது. எனினும், இந்த பட்டாசு மோகம் காரணமாக பல்வேறு இடங்களிலும் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த 2,282 பேர் மீது வழக்குப் பதிவானது. படம்: இபிஏ -

சென்னை: தீபா­வளி தினத்­தன்று விதிமுறையை மீறி அதிகள­வில் பட்­டா­சு­கள் வெடிக்­கப்­பட்­ட­தால், மாநி­லம் முழு­வ­தும் உள்ள முக்­கிய நக­ரங்­களில் தூசு­மூட்­டம் அதி­க­ரித் துக் காணப்­பட்­டது.

பக­லில் பெய்த மழை இர­வில் மட்­டுப்­பட்­டதை அடுத்து, தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் பலரும் நேரக் கட்டுப்பாட்டை மீறி, சரவெடிகளைத் தொடர்ந்து தெறிக்கவிட்டனர்.

இத­னால், சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­களிலும் போர்வை போல் புகை­மூட்­ட­ம் சூழ்ந்திருந்தது.

முகப்பு விளக்­கு­களை எரி­ய­விட்டுச் சென்றபோதி­லும் கிண்டி, நுங்­கம்­பாக்­கம், திரு­வல்­லிக்­கேணி, மயி­லாப்­பூர், ஆர்.ஏ.புரம் உள்­ளிட்ட இடங்­களில் எதி­ரில் வரும் வாக­னங்­கள் தெரி­யாத அள­வுக்கு புகை­மண்­ட­லம் சூழ்ந்­த­தாக வாகன ஓட்­டி­கள் தெரி­வித்­த­னர்.

இதனால், அவ­சர சிகிச்சை வாகனமோட்­டி­கள் முதல் பலரும் பெரும் சிர­மத்­துக்கு ஆளா­கி­னர்.

தலைநகர் சென்னையில் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 100 முதல் 150 என்ற அளவில் 'மோசம்' என்கிற நிலைக்குச் சென்ற தாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, வடசென்னையில் மணலி உள்ளிட்ட பகுதிகளில் 344 என்ற அளவிலும் நுங்கம்பாக்கத்தில் 270க்கு மேலாகவும் காற்றுத் தூய் மைக்கேட்டின் பாதிப்பு அதிகமாகப் பதிவாகி இருந்தது.

இதற்­கி­டையே, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 983 வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த ஆண்டில் மாநிலத்தில் அனுமதிக்கப் பட்ட நேரத்தைவிடவும் கூடுதலான நேரத்துக்கு பட்டாசு வெடித்ததாக 2,282 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். இவர்களில் சென்னையில் மட்டும் 758 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

தீபா­வ­ளி­யன்று சென்­னை­யில் குவி­யும் பட்­டாசுக் குப்­பை­களை 24 மணி­ நே­ரத்­தில் அகற்­ற­வேண்­டும் என மாந­க­ராட்சி ஆணை­யர் ககன்­தீப் சிங் உத்­த­ர­விட்­டி­ருந்­ததை அடுத்து, சென்­னை­யில் நேற்று காலை­வரை 48 டன் பட்­டாசுக் கழி­வு­கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் கூறினர்.

தீபா­வளி பண்­டி­கையை ஒட்டி தமிழ்­நாட்­டில் கடந்த இரண்டு நாட்­களில் மட்­டும் ரூ. 431 கோடிக்கு மது விற்­ப­னை­யான நிலையில், கடந்த ஆண்டைவிடவும் இவ்­வாண்­டில் ரூ.14 கோடி மது விற்­பனை குறைவு என்­றும் தக­வல்­கள் தெரி­வித்துள்­ளன.