கோவேக்சின்: பல நாடுகளிலும் அனுமதி கிடைக்க இந்திய அரசாங்கம் தீவிர முயற்சி

கோவேக்சின்: பல நாடுகளிலும் அனுமதி கிடைக்க இந்திய அரசாங்கம் தீவிர முயற்சி

1 mins read
50455264-bb32-4439-93a2-72e73d67cb41
-

புது­டெல்லி: கொவிட்-19க்கு எதிராக இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட கோவேக்­சின் தடுப்­பூ­சிக்கு உலக சுகா­தார அமைப்பு அனு­மதி வழங்­கி­ய­தை­ய­டுத்து, பல்­வேறு நாடு­க­ளி­லும் அதற்கு அங்­கீ­கா­ரம் பெற இந்­திய அரசு பேச்சு நடத்தி வரு­கிறது.

இந்­தி­யா­வில் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம், கோவேக்­சின் தடுப்­பூசியை உரு­வாக்­கி­யது. லண்­டன் ஆக்ஸ்­பர்ட் பல்­க­லைக்­க­ழ­கம், ஆஸ்ட்ராஸெனிகா இணைந்து கோவி­ஷீல்டு தடுப்­பூ­சியை உரு­வாக்­கின. கோவி­ஷீல்டு தடுப்­பூசியை இந்­தி­யா­வில் சீரம் இந்­தியா நிறு­வ­னம் தயா­ரித்­தது.

கோவி­ஷீல்டு தடுப்­பூ­சிக்­குப் பல நாடு­கள் அனு­ம­தி­ய­ளித்­தன. உலக சுகா­தார அமைப்­பும் அனு­மதி அளித்­தது. ஆனால், இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட கோவேக்­சின் தடுப்­பூ­சிக்கு மட்­டும் உலக சுகா­தார அமைப்பு அங்­கீ­கா­ரம் வழங்­கா­மல் தாம­தித்­தது.

கடை­சி­யாக கடந்த 3ஆம் தேதி அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்கு கோவேக்­சின் தடுப்­பூ­சியைப் பயன்­படுத்த உலக சுகா­தார அமைப்பு அனு­ம­தி­ய­ளித்­தது.

இதை­ய­டுத்து பல்­வேறு நாடு­களி­லும் கோவேக்­சின் தடுப்­பூசிக்கு அனு­மதி பெறு­வது தொடர்­பாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சு பல நாடு­களில் செயல்­படும் தன் தூத­ர­கங்­கள் வாயி­லாக பேச்சு நடத்தி வரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த முயற்­சிக்கு வெற்றி கிடைக்­கும்­பட்­சத்­தில் இந்­தியத் தடுப்­பூசி பல நாடு­க­ளி­லும் அதி­கம் பயன்­ப­டுத்­தப்­படும்.