சென்னையை மூழ்கடித்த மழை; முதல்வர் தீவிர நடவடிக்கை

மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு; மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

சென்னை: கடந்த சில தினங்க­ளாக பெய்துவரும் பலத்த மழை காரண­மாக ஒட்­டு­மொத்த சென்னை மாந­க­ர­மும் வெள்ளக்­கா­டாகி உள்ள நிலை­யில், பாதிக்­கப்­பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்­கொண்­டார்.

தொடர்ந்து மூன்­றா­வது நாளாக அவர் நேரடி ஆய்வு மேற்­கொண்­டதை அடுத்து, மீட்பு, நிவா­ர­ணப் பணி­கள் வேக­மெ­டுத்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

வில்­லி­வாக்­கம், மது­ர­வா­யல், விரு­கம்­பாக்­கம் உள்­ளிட்ட சென்னை­யின் முக்­கி­ய பகு­தி­களில் நிவா­ர­ணப் பணி­களை அவர் பார்­வை­யிட்­டார். ஆங்­காங்கே அமைக்­கப்­பட்­டுள்ள மருத்­துவ முகாம்­க­ளுக்­கும் சென்ற அவர், பொதுமக்­க­ளி­டம் குறை­களைக் கேட்­ட­றிந்­தார்.

சில இடங்­களில் நிவா­ரண உதவி­களை வழங்­கிய அவர், தமது கொளத்­தூர் தொகுதியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இல­வச உணவு வழங்க ஏற்­பாடு செய்­தார்.

மேலும், சென்­னை­யில் மழை நீர் தேங்கி உள்ள பகு­தி­க­ளுக்­கும் நேரில் சென்ற அவர், நீரை வெளி­யேற்­றும் நட­வ­டிக்­கை­களில் மேலும் வேகம் தேவை என அதிகாரி­களுக்கு அறி­வு­றுத்­தி­னார்.

தேங்­கி­யுள்ள மழைநீரு­டன் கழிவுநீரும் கலந்­து­விட்­ட­தால் பல்­வேறு பகு­தி­களில் சுகா­தார சீர்­கேடு ஏற்­படும் சூழல் நில­வு­கிறது. இதை­ய­டுத்து தாழ்­வான பகு­தி­களில் தேங்­கி­யுள்ள மழை நீரை வடிய வைக்­கும் பணி­கள் முழு வீச்­சில் நடை­பெற்று வரு­கின்­றன.

சென்­னைக்கு அருகே உள்ள நீர்நிலை­க­ளை­யும் முதல்­வர் பார்வை­யிட்­டார்.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய முதல்­வர், கடந்த அதி­முக ஆட்­சி­யில் மழை­நீர் வடி­கால் அமைப்­ப­தில் பல கோடி ரூபாய் முறை­கேடு நடந்­துள்­ள­தா­கக் குற்றம்­சாட்­டி­னார்.

அதிக அள­வில் லஞ்­சம் பெறப்­பட்­ட­தால் 'விவேக நக­ரம்' எனும் திட்­டத்­தின் கீழ் எந்­த­வித பணி­களும் முறை­யாக நடை­பெ­ற­வில்லை என்­றார் அவர்.

"மத்­திய அர­சி­டம் இருந்து நிதி பெற்­றும் விவேக நக­ரத் திட்­டப் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அந்­தத் திட்­டத்­து­டன் சம்­பந்­தப்­பட்ட ஒப்­பந்­த­தா­ரர்­கள் மீது நிச்­ச­ய­மாக, உறு­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்படும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின். இதற்­கி­டையே, சென்­னை­யில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகுதி­களை எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

மேலும், அதி­முக சார்­பில் பல்வேறு நிவா­ரண உதவி­க­ளை­யும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் வழங்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!