தொடர் மழை: வீட்டுக்குள் முடங்கிய சென்னை மக்கள்

12,200 வீடுகளில் மின்வெட்டு; லட்சக்கணக்கானோருக்கு இலவச உணவு

சென்னை: கன­ம­ழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை, புதிய காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் என அடுத்­தடுத்து வெளி­யா­கும் அறி­விப்­பு­களால் சென்னை மக்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கன­ம­ழையை எதிர்­கொள்ள அனைத்து ஏற்­பா­டு­களும் தயார் நிலை­யில் உள்­ள­தாக தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

75 ஆயிரம் போலி­சார் மீட்பு, நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தாக காவல்­துறைத் தலை­வர் சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

பொது­மக்­கள் தேவை­யின்றி வீடு­களை விட்டு வெளியே செல்ல வேண்­டாம் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வு­றுத்தி உள்ள நிலை­யில், ஒட்­டு­மொத்த சென்­னை­யும் வெள்­ளக்­கா­டாகக் காட்சி அளிக்­கிறது.

தாழ்­வான பகு­தி­க­ளி­ல் இடுப்­ப­ளவு தண்­ணீர் தேங்கி உள்­ளது. மின் வெட்டு, அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு, வீட்­டுக்­குள் மழை நீர் புகுந்­தது எனப் பல்­வேறு பிரச்­சி­னை­களை மக்­கள் எதிர்­கொண்­டுள்­ள­னர்.

தூர்­வா­ரி­ய­தால் பாதிப்பு குறைவு

இந்­நி­லை­யில் தூர்­வா­ரும் பணி­கள் முறை­யாக நடந்­த­தால்­தான் சென்னை மாந­க­ரம் பெரும் பாதிப்­பு­களில் இருந்து தப்­பி­யுள்­ள­தாக மாநக­ராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

சென்­னை­யில் கடந்த ஆறு ஆண்­டு­களில் இல்­லாத பெரு­மழை பெய்­துள்­ளது என்­றும் கடந்த மூன்று மாதங்­களில் மட்­டும் 800 கிலோ மீட்­டர் வடி­கால்­கள் தூர்­வா­ரப்­பட்­ட­தா­க­வும் மாநகராட்சி கூறியுள்ளது.

சென்­னை­யின் தண்­ணீர் ஆதா­ரங்­க­ளான பூண்டி, புழல், செம்­ப­ரம்­பாக்­கம் ஆகிய ஏரி­க­ளுக்­கான தண்­ணீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளது.

12,200 வீடு­களில் மின்­வெட்டு

சென்­னை­யில் தொடர்ந்து பெய்து வரும் கன­மழை கார­ண­மாக மக்­கள் வீடு­களில் முடங்கி உள்­ள­னர். இத­னால் மின்­சா­ரப் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், பல இடங்­களில் மழை, வெள்ள நீர் வீடு­க­ளுக்­குள் புகுந்­துள்­ள­தா­லும் தரை­வழி மின்­சார கேபிள்­கள் சேத­ம­டைந்­துள்­ள­தா­லும் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிப்பு அதி­க­முள்ள பகு­தி­களில் உள்ள 12,200 வீடு­க­ளுக்கு மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

396 அம்மா உண­வ­கங்­களில் இல­வச உணவு

சென்­னை­யில் 200 வார்­டு­களில் இயங்கி வரும் 396 அம்மா உண­வ­கங்­க­ளி­லும், அரசு மருத்­து­வ­ம­னை­களில் ஏழு இடங்­க­ளி­லும் பொது மக்­க­ளுக்கு உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கிறது.

மூன்று வேளை­யும் வழங்­கப்­படும் இல­வச உண­வால் குடிசை வாழ் மக்­கள், கூலித் தொழி­லா­ளர்­கள் பெரி­தும் பய­ன­டைந்­துள்­ள­னர்.

நிவா­ரண முகாம்­களில் ஆயி­ரக் கணக்­கா­னோ­ருக்கு உணவு

சென்­னை­யில் மழை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிவா­ரண முகாம்­களில் தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ருக்கு இம்­மு­காம்­களில் இல­வச உணவு வழங்­கப்­ப­டு­கிறது. நேற்று முன்­தி­னம் காலை 196,660 பேருக்கு இல­வச சிற்­றுண்­டி­, 215,000 பேருக்கு மதிய உண­வு, 213,800 பேருக்கு இரவு உண­வு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தொடர்ந்து நான்­கா­வது நாளாக நேற்­றும் முதல்­வர் ஸ்டா­லின் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேரில் சந்­தித்து குறை­களை கேட்­ட­றிந்­தார்.

மோச­மான வானி­லை­யால் சென்­னை­யில் இருந்து புறப்­பட வேண்­டிய நான்கு விமா­னங்­களும் சென்­னைக்கு வர வேண்­டிய நான்கு விமா­னங்­களும் நேற்று ரத்து செய்­யப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!