டெங்கி சிகிச்சை: 300,000 மாத்திரைகள் கையிருப்பு

டெங்கி சிகிச்சை: 300,000 மாத்திரைகள் கையிருப்பு

1 mins read
895c5153-d515-423a-90ed-f8d0676469cb
-

சென்னை: டெங்­கிக் காய்ச்­ச­லுக்கு சிகிச்சை அளிக்­கப் பயன்­படும் 'ஓசல்­டா­மி­விர்' போது­மான அளவு கையி­ருப்பு உள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

பரு­வ­கால நோய்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க தேவை­யான மருந்­து­களும் மருத்­துவப் பொருட்­களும் தமி­ழக அர­சால் முன்­கூட்­டியே கொள்­மு­தல் செய்­யப்­பட்டு வரு­வ­தாக தமி­ழக மருத்­துவப் பணி­கள் கழக மேலாண் இயக்­கு­நர் தீபக் ஜேக்­கப் தெரி­வித்­துள்­ளார்.

"டெங்கி சிகிச்சைக்காக வழங்­கப்­படும், 'ஓசல்­டா­மி­விர்' மாத்­தி­ரை­கள் 3 லட்­ச­மும் காய்ச்­ச­லுக்கு வழங்­கப்­படும் 'பாரா­சிட்­ட­மால்' மாத்­தி­ரை­கள் 90 மில்­லி­ய­னும் கையி­ருப்­பில் உள்­ளன.

"கடந்த ஆண்டு டெங்­கிக் காய்ச்­ச­லுக்கு 170,500 மாத்­தி­ரை­கள் தேவைப்­பட்­டது. இம்­முறை அதை­விட அதிக மாத்­தி­ரை­கள் உள்­ளன. இது­த­விர இதர பருவ­கால உடல்­கோ­ளா­று­களுக்குச் சிகிச்சை அளிப்­ப­தற்­கான மருந்து­கள் போது­மான அள­வில் உள்ளன," என்­றார் தீபக்.

தமி­ழ­கத்­தில் நடப்­பாண்­டில் இது­வரை, 3,800க்கும் மேற்­பட்­டோர் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.