சென்னை ஏரியானது; காற்றும் பதம்பார்த்தது

சென்னை ஏரியானது; காற்றும் பதம்பார்த்தது

2 mins read
3ab4f8aa-bc5e-4ce6-9955-2b39a5155ad7
-

சென்னை: தமிழ்­நாட்­டின் தலை­நகரான சென்னையை வட­கி­ழக்­குப் பரு­வ­மழை ஏறக்­கு­றைய ஒரு பெரிய ஏரி­யாகவே மாற்­றி­விட்­டது.

மண்­ணைப் பார்க்க இய­லாத அள­வுக்­குத் தரை எங்­கும் ஏற்­கெனவே தண்­ணீர் சூழ்ந்­து­விட்ட நிலை­யில் கரும் மேகம், இடைவிடா மழை, பலத்த காற்று, ஏரி­களில் இருந்து மேலும் தண்­ணீர் திறப்பு எல்­லாம் சேர்ந்ததால் நேற்று சென்னை மக்­கள் மேலும் பீதி அடைந்துவிட்டனர்.

பல நாட்­களாக மழை பெய்துவந்த நிலை­யில் வங்­கக்­க­ட­லில் உரு­வான காற்­ற­ழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்­பெற்று தாழ்வு மண்­ட­ல­மாக மாறி நேற்று மாலை கரை­யைக் கடந்­தது.

சென்­னை­யில் மெரினா, பட்­டி­னப்­பாக்­கம், திரு­வான்­மி­யூர், பெசன்ட்­ந­கர், காசி­மேடு, எண்­ணூர், திரு­வொற்­றி­யூர் உள்­ளிட்ட கடலோரப் பகு­தி­களில் பலத்த காற்று வீசி­யது. கடல் அலை­கள் சீற்­றத்­து­டன் 3 அடி வரை எழுந்­த­தாக தென்­மண்­டல வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

காற்­ற­ழுத்தத் தாழ்வு மண்­ட­லம் சென்­னையை நெருங்­கி­ய­போது பட்­டி­னப்­பாக்­கம் கடற்­க­ரை­யில் காற்று­டன் மண­லும் சேர்ந்து கடற்­கரையை நோக்கி வீசப்­பட்­ட­தால் கடற்­கரைப் பகு­தி­கள் இருள் சூழ்ந்­ததுபோல் காணப்பட்டன.

பல இடங்­களில் மேலும் மரங்­கள் விழுந்­தன. மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டது. வெளியே வர­வேண்டாம் என்று மக்­கள் கேட்டுக் ­கொள்ளப்­பட்­ட­னர். சென்­னையை வழக்க நிலைக்­குக் கொண்டு­வர மாநில நிர்­வா­கம் பல்­வேறு முயற்சி­களை­யும் நிவா­ர­ணப் பணி­க­ளை­யும் தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

அதே­வே­ளை­யில், சென்­னை­யில் மித­மிஞ்­சிய மழைக்கு இனி வாய்ப்பு இல்லை என்­றும் கன­மா­ன, மிகக் கன­மான மழை பெய்­ய­லாம் என்றும் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­தது.

நாளை வங்­கக் கட­லில் புதிய குறைந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப்­பகுதி உரு­வாக வாய்ப்­புள்­ள­தாக இந்­திய வானிலை மையம் அறி­வித்­துள்­ளது.