சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்ததால் நேற்று மாலைவரை சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க வில்லை என்று தெரிவிக்கப் பட்டது.
என்றாலும் சென்னையில் இருந்து விமானங்கள் வழக்கம்போல் புறப்பட்டுச் சென்றன. மொத்தம் 10க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்தானதாகவும் விமான நிலைய நிர்வாகம் கூறியது.