சென்னை: சென்னை கே.கே. நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகளும் உடனிருப்பவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.
இதுபற்றி கவலை தெரிவித்த சிறப்பு கண்காணிப்பு அதிகாரி விஜயலட்சுமி, மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்துள்ள தண்ணீர் விரைவில் வடிந்துவிடும் என்று சொல்லி நோயாளிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்திவருவதாகத் தகவல்கள் கூறின.