சென்னை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடும் மழையும் காற்றும் வீசிய சூழலில் அதற்குச் சில மணி நேரம் முன்னதாக தமிழக முதல்வர் தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது.
பொதுமக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவி உள்ளிட்ட பலவும் அந்தக் கூட்டத் தில் முடிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நேரடியாக அனுப்பி வைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.

