ஆற்றில் தூங்கியவர் 3 நாட்கள் பாலத்தின் கீழே சிக்கினார்
மதுராந்தகம் வட்டாரத்தைச் சேர்ந்த உதயகுமார், 48, என்பவர் போதையில் பாலாற்றில் படுத்து தூங்கினார். திடீரென்று வெள்ளம் வந்ததால் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். மூன்று நாட்களாக உதவிக்குக் கூச்சல் போட்டும் யார் காதிலும் விழவில்லை. கடைசியாக அவரைப் பார்த்த ஒருவர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தார். உதயகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: தமிழக ஊடகம்
ஏரி மீன் வாங்கக் கூட்டம்
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டதால் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரில் ஏராள மீன்கள் வருவதால் அவற்றைப் பிடித்து குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சந்தை அமைத்து பலரும் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். மீன்வாங்க கூட்டம் அலைமோதுவதாக நேற்றுத் தகவல்கள் தெரிவித்தன. படம்: தமிழக ஊடகம்
பொதுத்தொண்டில் போலிஸ்

