சென்னை: ஆட்சிகளும் கட்சிகளும் மாறிமாறி வந்தாலும் மக்கள் காணக்கூடிய காட்சிகள் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை என கனமழை, வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ேவதனை ெதரிவித்துள்ளார்.
"மழைக்காலத்தில் சென்னை மக்கள் அதிக அளவில் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். இரண்டு நாள் மழைக்கே சென்னை மாநகரம் கடல்போல் மாறியுள்ளது. ஒவ்வொரு ஆட்சியிலும் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள் யாரும் இதைக் கவனிப்பதில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
"சமாதிகள், மேம்பாலங்கள், நினைவிடங்கள் கட்டுவதைவிடவும் சென்னை வெள்ள பாதிப்பிற்கு அடுத்த மழைக் காலத்திற்குள் நிரந்தரத் தீர்வு காணவேண்டும்," என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.