சென்னை: தமிழகத்தில் கனமழை, பெருவெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி பல இடங்களிலும் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் மீண்டும் இப்போது சீராக விநியோகிக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 36,000 ஊழியர்களும் சென்னையில் 4,000 மின்வாரிய ஊழியர்களும் மின் இணைப்புகளைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலு வலகத்தில் அனைத்து பொறி யாளர்களுடனும் ஆலோசனை நடத்திய அமைச்சர், சென்னையில் 66,000 வாடிக்கையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இப்போதுவரை 38,000 இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் எஞ்சியிருக்கும் 28,000 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

