சென்னை: கடந்த ஆறு நாட்களில் மட்டும் சென்னையில் 491% அளவுக்கு கூடுதலாக மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் இம்மாதம் 7ஆம் தேதி முதல் ேநற்றைய 12ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில் மட்டும் இயல்பைவிடவும் 42% அதிக மழை பெய்துள்ளது. அதேேபால், சென்னையிலும் இந்த ஆறு நாட்களில் மட்டும் 491% அதிக அளவில் மழை கொட்டியுள்ளது," என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறியுள்ளன.

