சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மெரினா கடலில் கழிவுநீர் கலப்பதால் அது கறுமை நிறத்துக்கு மாறியுள்ளது. அத்துடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
மெரினா கடற்கரை ஓரங்களில் கழிவுப் பொருட்களும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களும் தேங்கியுள்ளதால் நீரின் அடர்த்தி அதிகரித்துள்ளது. அதேபோல், கனமழையில் அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் மெரினா கடலில் கலந்துள்ளதால் இதனைச் சரிசெய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.