'கையைத்தான் இழந்தேனே தவிர நம்பிக்ைகயை அல்ல'

'கையைத்தான் இழந்தேனே தவிர நம்பிக்ைகயை அல்ல'

1 mins read
45a8aade-9433-41b3-977e-e78569ea08e2
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகளைத் தயாரிக்கிறார் மண்பாண்டக் கலைஞரான மதுரை பரவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆர்.வேல்முருகன். படம்: ஊடகம் -

மதுரை: தொழிற்­சாலை விபத்­தில் தனது ஒரு கையை இழந்த மாற்­றுத்­தி­ற­னாளி ஆட­வர் ஒரு­வர், "எனது கையைத்­தான் இழந்­தே­னே­த­விர நம்­பிக்­கையை இன்­னும் இழக்­க­வில்லை," என்று கூறு­கி­றார்.

இவர் மற்­றொரு கையின் உத­வி­யைக்­கொண்டு மண்­பாண்­டப் பொருள்­க­ளைத் தயா­ரித்து பணம் ஈட்டி வரு­கி­றார்.

மதுரை மாவட்­டம், பர­வைப் பகு­தி­யைச் சேர்ந்த ஆர்.வேல்­ முரு­கன், 35, "எனது உல­கமே இந்த மண்­பாண்­டக் கலை­யில்­தான் உள்­ளது," என்­கி­றார். இவ­ருக்கு மனை­வி­யும் இரு குழந்­தை­களும் உள்­ள­னர்.

இன்­னும் சில தினங்­களில் கொண்­டா­டப்­பட உள்ள கார்த்­திகை தீபத்­தி­ரு­நா­ளுக்­காக விளக்­கு­கள், அகல்­வி­ளக்­கு­கள், கிளி­யாஞ்­சட்­டி­களை உற்­பத்தி செய்து வரு­கி­றார்.

இது­கு­றித்து வேல்­மு­ரு­கன் கூறு­கை­யில், "10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொழிற்­சாைல விபத்­தில் எனது வலது கை துண்­டா­னது. ஆலை நிர்­வா­கம் சொன்­ன­படி உதவி செய்­ய­வில்லை. எங்கு ஏறி இறங்­கி­யும் வேலை கிடைக்­க­வில்லை. இத­னால் மண்­பாண்­டத் தொழி­லைத் தொடங்­கி­னேன்.

"சிறு­வர்­கள் சேமிக்­கும் உண்­டி­யல், விளை­யாட்­டுப் பொருட்­கள், ஆடி மாத கஞ்­சிக் கல­யம், பொங்­கல் பானை எனப் பரு­வத்­துக்­கேற்ப என் உற்­பத்தி தொடர்­கிறது. இவ்­வே­லை­யில் தொடக்­கத்­தில் சிர­மப்­பட்­டா­லும், தற்­போது ஓர­ளவு நல்ல வரு­மா­னம் பார்த்து வரு­கி­றேன்," என்­கி­றார்.