தமிழகத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்து

சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குக் கூடுதல் விமானங்களை இயக்க அனுமதிக்கவேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின்னஞ்சலில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,850 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இச்சூழலில், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளதை அடுத்து, இந்தியப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைப் பல்வேறு நாடுகளும் விலக்கி வருகின்றன.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா அலைகளின் கடும் தாக்கம் காரணமாக பல நாடுகளில் இருந்தும் பயணிகள் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்குக் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்பட்டன. ஆனால், சென்னையில் இருந்து விமானங்கள் இன்னமும் இயக்கப்படவில்லை.

“தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மலேசியா, சிங்கப்பூருக்குச் செல்ல காத்திருப்பதால் சென்னை, திருச்சியில் இருந்தும் கூடுதல் விமானங்களை இயக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 7ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இந்தியப் பயணிகள் செல்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நவம்பர் 15 முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!