132 வயது சந்தனம்மாள் மரணம்

132 வயது சந்தனம்மாள் மரணம்

1 mins read
d01da495-cf33-4dd5-a654-0ec9dea8f316
சந்­த­னம்­மாள். படம்: ஊடகம் -

தொண்டி: ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் தொண்டி அருகே உள்ள வேலாங்­குடி கிரா­மத்­தில் வாழ்ந்து வந்த நான்கு தலை­முறை கண்ட 132 வயதுப் பாட்டி சந்­த­னம்­மாள் சனிக்­கி­ழமை கால­மா­னார்.

கடந்த 1889ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்த சந்­த­னம்­மா­ள், ஆரோக்­கி­யம் என்ற வேளா­ணியை மணந்­தார்.

அத்­தம்­ப­திக்கு 10 பிள்­ளை­கள். அவர்­களில் மூன்று மகன்­களும் மூன்று மகள்­களும் இப்போது நல­மு­டன் உள்­ள­னர்.

கண­வர் ஆரோக்­கி­யம் 1982ஆம் ஆண்டு கால­மா­னர். மூதாட்­டிக்கு 25 பேரன், பேத்­தி­கள் உள்­ள­னர். 50 கொள்­ளுப் பேரப்­பிள்­ளை­களும் இருக்­கி­றார்­கள்.

மருத்­து­வ­மனைக்கே செல்­லாத சந்­த­னம்­மாள் மீன் குழம்பை விரும்பிச் சாப்பிடு­வா­ராம்.